இந்தியா

2019ல் குழந்தை பெற்ற 21 ஆயிரம் பேர் சிறுமிகள்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

ENS


திருவனந்தபுரம்: கடந்த 2019ஆம் ஆண்டில் கேரளத்தில் குழந்தை பெற்ற 20,995 பேர் சிறுமிகள் என்ற அதிர்ச்சித் தகவல் பொருளாதார மற்றும் புள்ளியல் துறை வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

குழந்தை திருமணம் எனும் கொடிய அரக்கனிடமிருந்து கேரளம் மிக மோசமாக சிக்கிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாக இந்த புள்ளி விவரம் அமைந்துள்ளது.

இந்த 20,995 தாய்மார்களும் 15 வயதுக்கு உள்பட்டவர்கள். அது மட்டுமல்ல, மேலும் அதிர்ச்சியடையும் வகையில், இவர்களில் 19,316 பேர் தங்களது இரண்டாவது குழந்தையையும், 59 பேர் 3வது குழந்தையையும், 16 பேர் நான்காவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளனர் என்கிறது விட்டல் புள்ளியில் அறிக்கை 2019. 

மேற்கண்ட இந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளித்தாலும், அடுத்து வரும் தகவல் சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். பொதுவாக நகர்ப் பகுதிகளை விடவும் கிராமப் பகுதிகளில்தான் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் தூசுபோல தட்டிவிட்டு, 21 ஆயிரம் சிறுமிகளில் நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 15,248 பேர் என்கிறது புள்ளி விவரம். கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 5,747 பேர். 57 பேரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள்.

அடுத்த புள்ளி விவரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்?

2019ஆம் ஆண்டு நடந்த பிரசவங்கள் 4.80 லட்சம். இதுவே 2018ல் 4.88 ஆக இருந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2019ல் பிறந்த 4,80,113 குழந்தைகளில் 2,44,953 ஆண் குழந்தைகள், 2,35,129 பெண் குழந்தைகள். இதன் மூலம் அந்த ஆண்டில் கேரளத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் பிறந்துள்ளன என்பது தெளிவாகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT