முகப்பு
இந்தியா

ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 8 பேரில் நால்வர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். எஞ்சிய நான்கு பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் லக்னெள - மும்பை இடையிலான விரைவு ரயில் 20 வயது பெண் ஒருவர் பயணித்துள்ளார். 

ரயில் காட்புரி - கசரா பகுதிகளுக்கு இடையே சுரங்கத்திற்குள் செல்வதற்காக ரயில் வேகத்தை குறைத்துள்ளது. அப்போது ரயிலில் கத்தி உள்பட தோல் பொருள்களுடன் வந்த மர்ம நபர்கள் 8 பேர் பயணிகளை மிரட்டியுள்ளனர். 

20 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற அவர்கள் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அரசு ரயில்வே காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அப்போது சக பயணிகள் கூச்சலிட்டதில் வேகமாக செயல்பட்ட காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்தனர். தப்பியோடிய நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், பிடிபட்ட 4 பேரிடம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →