முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,069 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,069 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,069 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,069 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,81,677 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,616 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 64,07,936 பேர் குணமடைந்துள்ளனர்.

43 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,39,621 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 30,525 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 6,04,20,515 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.