இந்தியா

பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ளம்: விமானத்தை பிடிக்க டிராக்டரில் செல்லும் பயணிகள்

DIN

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் தேங்கியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

பெங்களூரு முழுவதும் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் நேற்று மாலை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் தேங்கியது. இதனால், விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

மேலும், விமான நிலையத்திற்கு வெளியே கார் செல்ல முடியாத அளவிற்கு நீர் தேங்கியுள்ளதால், காரில் வருபவர்கள் அங்கிருந்த டிராக்டர் மூலம் உடைமைகளுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை, கொச்சி, புணே, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் கிளம்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT