இந்தியா

பாக். பயங்கரவாதிக்கு 14 நாள்கள் போலீஸ் காவல்: தில்லி நீதிமன்றம்

DIN


தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி ஆவணங்கள், ஏகே-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அவர் 'ஸ்லீப்பர் செல்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளதாகவும், இந்திய அடையாள ஆவணங்களைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசித்து வருவதாகவும் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு துணை ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT