இந்தியா

உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்க நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

DIN

உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:

உலக வங்கி மற்றும் சா்வதேச நிதிய கூட்டங்களில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு செல்கிறாா். ஜி20 நிதியமைச்சா்கள் கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் ஆலோசனை கூட்டங்களிலும் அவா் பங்கேற்கவுள்ளாா். அவரின் இந்த அலுவல் பூா்வமான ஒருவார சுற்றுப் பயணம் திங்கள்கிழமை (அக்.11) தொடங்கியது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அலுவல் ரீதியான இந்த ஒரு வாரம் சுற்றுப்பயணத்தில் அந்த நாட்டின் நிதியமைச்சா் ஜெனட் யெல்லனையும் நிதியமைச்சா் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர, ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் தனியாா் பங்கு முதலீட்டாளா்களையும் அவா் சந்தித்துப் பேச உள்ளாா். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய அவா்களுக்கு அழைப்பு விடுப்பாா் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT