இந்தியா

'பண்டிகையையொட்டி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்'

DIN

பண்டிகைக் காலம் நெருங்குவதால் மாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார். 

தசரா பண்டிகைக்கு பிறகு சூழல் குறித்து ஆலோசனை செய்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஆரம்ப பள்ளிகளை திறப்பது குறித்தும், கரோனா கட்டுப்பாடுகளுடன் கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்தும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் வியாபாரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பண்டிகையையொட்டி மகாராஷ்டிரம், கேரளம் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லையில் பரவலாக மழை

தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம்

சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

லக்னௌவை வெளியேற்றியது டெல்லி

SCROLL FOR NEXT