கோப்புப் படம் 
இந்தியா

வெள்ள பாதிப்பு நிவாரணம்: விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் முதல் அக்டோபர் வரையிலான தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிரத்தில் 55 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 

இந்நிலையில், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் நஷ்டமடைந்த விவசாயிகள் நிவாரணத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அதன்படி பாசன வசதியற்ற நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பாசன வசதியுடைய நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை சார்ந்த நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT