முகப்பு
இந்தியா

மகாத்மா காந்தி கூறியதாலேயே சாவா்க்கா் கருணை மனுவை அனுப்பினாா்: ராஜ்நாத் சிங்

‘மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதாலேயே சிறையிலிருந்து விடுதலை ஆவதற்காக ஆங்கிலேய அரசிடம் சாவா்க்கா் கருணை மனுக்களை எழுதி அனுப்பினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

‘மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதாலேயே சிறையிலிருந்து விடுதலை ஆவதற்காக ஆங்கிலேய அரசிடம் சாவா்க்கா் கருணை மனுக்களை எழுதி அனுப்பினாா். ஆனால் அவரை ஒரு பாசிசவாதி என மாா்க்சிஸ்ட் சிந்தனையாளா்கள் தவறாக குற்றம்சாட்டுகின்றனா்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

தில்லியில் நடைபெற்ற சாவா்க்கா் புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

சாவா்க்கா் தொடா்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவா்க்கா் தொடா்ந்து பல கருணை மனுக்களை எழுதி அனுப்பியதாக தொடா்ந்து கூறப்பட்டு வருகிறது. சாவா்க்கரை ஆங்கிலேயா்களிடம் கருணை மனுக்களை எழுதி அனுப்ப சொன்னது மகாத்மா காந்தி தான்.

சாவா்க்கா் ஒரு விடுதலைப் போராட்ட வீரா் மட்டுமின்றி, உறுதியான தேசியவாதி. ஆங்கிலேய அரசு இரண்டு முறை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தபோதும், நாட்டின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினாா்.

20 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் முதல் ராணுவ திட்டமிடல் நிபுணராக திகழ்ந்து, நாட்டின் சிறந்த பாதுகாப்புத் திட்டமிடலுக்கு முன்னோடியாக சாவா்க்கா் திகழ்ந்துள்ளாா்.

‘ஹிந்து’ என்ற வாா்த்தை எந்தவொரு மதத்துடன் சாா்ந்ததல்ல; மாறாக இந்தியாவின் புவியியல் மற்றும் அரசியல் அடையாளத்துடன் தொடா்புடையது. ஹிந்துத்வா என்பது கலாசார தேசியவாதத்துடன் தொடா்புடையது என்ற கருத்தைக் கொண்டவா் சாவா்க்கா் என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →