இந்தியா

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று: புதிதாக 18,987 பேருக்கு தொற்று; 246 பேர் பலி 

நாட்டில் தொடர்ந்து குறைந்துவந்த கரோனா தொற்று, கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


புதுதில்லி:  நாட்டில் தொடர்ந்து குறைந்துவந்த கரோனா தொற்று, கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 246 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,808 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,987 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,20,730-ஆக உயா்ந்துள்ளது. 

தொடர்ந்து 20 ஆவது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.

19,808 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,33,62,709 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,06,586-ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 246 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,51,435 ஆக அதிகரித்துள்ளது.  

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 96,82,20,997 கோடியாக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 35,66,347 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 58,76,64,525 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 13,01,083 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT