கட்சி அலுவலகத்திலிருந்து புறப்படும் சித்து 
இந்தியா

பஞ்சாப் காங்கிரஸில் விரைவில் தீர்வு: ஹரீஷ் ராவத்

பஞ்சாப் காங்கிரஸ் விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 

DIN


பஞ்சாப் காங்கிரஸ் விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருடன் ஹரீஷ் ராவத் இன்று ஆலோசனை நடத்தினார்.  இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சரண்ஜித் சன்னி சில விஷயங்கள் குறித்து பேசினர். விரைவில் தீர்வு எட்டப்படும். ஆனால், சில விஷயங்களுக்கு நேரம் எடுக்கும்" என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ராஜிநாமா செய்தார். ஆனால், அவரது ராஜிநாமாவைக் கட்சி ஏற்கவில்லை. அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சிக்குள் ஏற்பட்ட இந்தக் குழப்பம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

சாதிவாரி கணக்கெடுப்பால் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ஜிஎஸ்டி வரி! | செய்திகள்: சில வரிகளில் | 22.9.25

SCROLL FOR NEXT