கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் புதிதாக 26 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,337 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 59653 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 36 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதுவரை மொத்தம் 14,13,921 பேர் குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி 327 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT