முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
மன்மோகன் சிங்
பகிர்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மன்மோகன் சிங் காய்ச்சலில் இருந்து மீண்ட நிலையிலும் உடல் பலவீனமடைந்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பிலிருந்து வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளாது.

முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களை சந்தித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →