சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்) 
இந்தியா

நாட்டை யார் வழிநடத்துகிறார்கள்? ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத் கருத்துக்கு சிவசேனை கேள்வி

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் கேள்வி எழுப்பியுள்ளார்

DIN

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் கேள்வி எழுப்பியுள்ளார்

நாட்டில் தேசவிரோத சக்திகள் போதைப் பொருள் கடத்தலுக்கு நிதியுதவி அளித்துவருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோகன் பாகவத் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், யார் மத்திய அரசை வழிநடத்தி வருகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் போதைப் பொருள் கடத்தல் மூலம் பெறப்படும் பணம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தால் நாட்டை தற்போது யார் வழிநடத்தி வருகிறார்கள்? பணமதிப்பிழப்பின் மூலம் போதைப் பொருள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பதையும் சஞ்சய் ரெளத் சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

கிர்க் கொலைக்காகக் கொண்டாட்டமா? வெளியேறத் தயாராக இருங்கள்! வெளிநாட்டினருக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

SCROLL FOR NEXT