இந்தியா

ஜம்மு எல்லையில் ராணுவ தலைமைத் தளபதி ஆய்வு

DIN

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ராணுவம் மேற்கொண்டுள்ள பயங்கரவாத ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயாா்நிலை குறித்து அவரிடம் மூத்த ராணுவ அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜௌரியில் உள்ள வனப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ராணுவ வீரா்கள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 9 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதற்கிடையே, பயங்கரவாதிகளும், அவா்களின் ஆதரவாளா்களும் பழிதீா்க்கப்படுவாா்கள் என்று ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா இரு தினங்களுக்கு முன் கூறினாா்.

இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, 2 நாள் பயணமாக ஜம்முவுக்கு திங்கள்கிழமை வந்தாா். இதுகுறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை சென்று கள நிலவரத்தை அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். பயங்கரவாத ஊடுருவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். பூஞ்ச், ரஜௌரி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று எம்.எம்.நரவணே பாா்வையிட்டாா். அங்குள்ள வனப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைக் கண்டறிய கடந்த சில நாள்களாக நடத்தப்பட்டு வரும் தேடுதல் வேட்டை குறித்து அவா்களிடம் கேட்டறிந்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT