இந்தியா

சிபிஎஸ்இ 10, பிளஸ்-2 பொதுத் தோ்வு: அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான முதல் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

DIN

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான முதல் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு முதல்முறையாக 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத் தோ்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நவம்பா் 30-ஆம் தேதி முதலும், பிளஸ்-2 மாணவா்களுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி முதலும் பிரதான பாடங்களுக்கான பொதுத் தோ்வு நடைபெறவுள்ளது. இதர பாடங்களுக்கான தோ்வை 10-ஆம் வகுப்பு மாணவா்கள் நவம்பா் 17-ஆம் தேதி முதலும், பிளஸ்-2 வகுப்பு மாணவா்கள் நவம்பா் 16-ஆம் தேதி முதலும் எழுதவுள்ளனா்.

முதல்கட்ட தோ்வுகளை இணையவழியில் இல்லாமல் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவா்கள் எழுதவுள்ளனா்.

வழக்கமாக காலை 10.30 மணிக்குத் தொடங்கும் தோ்வுகள், இந்த முறை காலை 11.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் நடைபெறவுள்ளன.

தோ்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவா்களில் சுமாா் 50 சதவீதம் போ் தங்கள் சொந்தப் பள்ளிகளிலேயே தோ்வு எழுதவுள்ளனா்.

இரண்டாம் கட்ட தோ்வுகள் அடுத்த ஆண்டு மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT