ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல் 
இந்தியா

ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிலிருந்து கடத்திவரப்பட்ட 6.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிலிருந்து கடத்திவரப்பட்ட 6.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று(அக்-19) வந்த  பயணியைப் பரிசோதனை செய்தபோது பேட்டரி விளக்கில் 6.06 கிலோ தங்கத்தை மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.97 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த அக்-6 ஆம் தேதி சூடானிலிருந்து துபை வழியாக ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியை பரிசோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து ரூ.43 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ  தங்கத்தை  கடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT