கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

DIN

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலைமுதல் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தராகத் பகுதியில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து! மாற்றி யோசித்த பாஜக, ரூ.6088 கோடி வசூலித்து சாதனை!

மெரினாவில் இரவுநேரக் காப்பகம்! உதயநிதி திறந்துவைத்தார்!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT