கர்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்
கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 15 கிமீ தொலைவில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக சில நாட்களுக்கு முன் கர்நாடக்த்தின் பிதார் மற்றும் கல்புர்க்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.