கோப்புப்படம் 
இந்தியா

'வரலாற்று நாள்' - 100 கோடி தடுப்பூசி செலுத்தியது குறித்து பிரதமர் மோடி ட்வீட்

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள நிலையில் பிரதமர் மோடி சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 9 மாதங்களில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 100 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா். 

நாட்டில், மக்கள் தொகையின் அடிப்படையில் உத்தரகண்டில் அதிகபட்சமாக முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடி மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த சாதனையைக் கொண்டாடும் பொருட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுகாதாரத்துறையினர் கலந்துகொள்ளும் காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

'இந்தியாவின் வரலாற்று நாள் இன்று. 130 கோடி இந்தியர்களின் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் வெற்றியை இன்று காண்கிறோம். 

100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நாடு, இந்த சாதனையை அடைய உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT