மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி (கோப்புப்படம்) 
இந்தியா

2025-க்குள் 5 டிரில்லியன் டாலரைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

DIN

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

காணொலி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய பொது விவகார மன்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலரைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். மேலும், இது 2030-ஆம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்.

நாட்டின் வளா்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பெட்ரோல் பயன்பாடு கரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் 16 சதவீதமும், டீசல் நுகா்வு 10-12 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதேபோன்று, பங்குச் சந்தையும் 2020 மாா்ச்சிலிருந்து 250 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துள்ளது.

பிபிசிஎல் நிறுவனத்தை தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அனைவரது கருத்துகளும் நல்ல முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

சிவ (நவ) தாண்டவம்

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அருளும் வேணுகோபாலன்

குறை தீர்க்கும் குமரன்

SCROLL FOR NEXT