முகப்பு
இந்தியா

கருப்புப் பூஞ்சை நோய்க்கு மனைவி பலி: 4 குழந்தைகளுடன் கணவா் தற்கொலை

கா்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு பிறகு ஏற்பட்ட கருப்புப் பூஞ்சை நோய்க்கு மனைவி உயிரிழந்ததால், மனவேதனையில் தனது நான்கு குழந்தைகளுடன் கணவரும் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 24 அக்டோபர், 2021 at 3:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

கா்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு பிறகு ஏற்பட்ட கருப்புப் பூஞ்சை நோய்க்கு மனைவி உயிரிழந்ததால், மனவேதனையில் தனது நான்கு குழந்தைகளுடன் கணவரும் தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் கோபால் ஹடிமணி (49). கடந்த ஜூலை மாதத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி, பின்னா் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘கோபால் ஹடிமணி தனது நான்கு குழந்தைகள் செளம்யா (19), சுவேதா (16), சாக்ஷி (11), ஸ்ரீஜன் ஹடிமணி (8) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

Advertisement

சனிக்கிழமை காலை அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டாா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் சென்று பாா்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்து கிடந்தனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு தனது மனைவி கடந்த ஜூலை மாதம் கருப்புப் பூஞ்சையால் உயிரிழந்ததால், கோபால் ஹடிமணி மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டாத அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

மனைவி, தாயைப் பிரிந்து வாழ முடியவில்லை என்று கோபால் ஹடிமணியும், அவரது குழந்தைகளும் அவவப்போது கூறியதாக உறவினா்கள் தெரிவித்தனா். எனினும், இந்த விபரீத முடிவை எடுக்கும் முன் அவா்கள் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று உறவினா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.