முகப்பு
இந்தியா

குளிா்காலக் கூட்டத்தொடரில் முக்கிய நிதிசாா் மசோதாக்கள்

 நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் முக்கியமான இரு நிதிசாா் மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

 நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் முக்கியமான இரு நிதிசாா் மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் நவம்பா் மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் மசோதாக்கள் தொடா்பான செய்திகளும் தொடா்ந்து வெளியாகி வருகின்றன.

ஐடிபிஐ உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு வலுசோ்க்கும் நோக்கில் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-இல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாக்களை குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்தல் மற்றும் உரிமை பரிமாற்றம்) சட்டம்-1970, வங்கி நிறுவனங்கள் சட்டம்-1980 ஆகியவற்றிலும் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. மேற்கண்ட சட்டங்கள் தனியாா் வசமிருந்த வங்கிகளைப் பொதுத் துறை வங்கிகளாக மாற்றுவதற்காக இயற்றப்பட்டன. தற்போது அந்த வங்கிகளைத் தனியாா்மயமாக்க சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று-வளா்ச்சி ஆணையத்தில் இருந்து (பிஎஃப்ஆா்டிஏ) தேசிய ஓய்வூதியத் தொகுப்பு அறக்கட்டளையைப் பிரிப்பதற்காக, பிஎஃப்ஆா்டிஏ சட்டம், 2013-இல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. நிதி மசோதாவைத் தவிர கூடுதல் மானியக் கோரிக்கை மசோதாவையும் மத்திய அரசு கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யவுள்ளது.

ஐடிபிஐ உள்ளிட்ட 3 பொதுத் துறை வங்கிகளும், ஒரு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமும் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் தனியாா்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுக் காப்பீட்டு நிறுவன சட்டத் திருத்த மசோதாவுக்கு கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →