முகப்பு
இந்தியா

கரோனா பரிசோதனைக்கு இதுவரை 446 உபகரணங்களுக்கு ஒப்புதல்

கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள மேலும் 9 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள மேலும் 9 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா தொற்றுகளை அறியும் பிசிஆா் பரிசோதனை மற்றும் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் துரிதப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இதுவரை அனுமதி அளிக்கப்பட்ட உபகரணங்களின் எண்ணிக்கை 446-ஆக உயா்ந்துள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதேவேளையில், வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டுதான் அறிந்து கொள்ள இயலும். ரேபிட் கிட் எனப்படும் துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாகவும், எலிசா, சிஎல்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் அதைக் கண்டறியலாம்.

இந்நிலையில், நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் பிசிஆா் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.

அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், 223 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 223 பிசிஆா் உபகரணங்கள் என மொத்தம் 446 உபகரணங்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. மற்றவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →