இந்தியா

ஜிகா வைரஸ்: உ.பி.க்கு மத்திய அரசின் உயர்நிலைக் குழு விரைவு

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து மத்திய அரசின் பல்துறை மருத்துவக் குழுவினர் அம்மாநிலத்திற்கு திங்கள்கிழமை விரைந்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வரும் 57 வயதுடைய இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு அக்டோபர் 22ஆம் தேதி கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவரை தனிமைப்படுத்திய மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் பல்துறை மருத்துவக் குழுவினரை கான்பூருக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT