ம.பி: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகன் கைது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினி மாவட்டத்தைச் சேர்ந்த பத்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான முரளி மோர்வாலின் மகன் கரன் மோர்வால்(30) தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என இளம் பெண் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கடந்த ஏப்ரல் -2 ஆம் தேதி வழக்குப் பதியப்பட்டது.
ஆனால் இதை அறிந்த கரன் மோர்வால் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த ஏப்ரல்-2 தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியைப் பிடிக்க 6 மாதமா? என சமூகவலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக கரனைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.25,000 சன்மானம் தர காவல்துறையினர் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.