இந்தியா

பிஎஸ்எஃப் அதிகார விரிவாக்கத்தால் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா்:மேற்கு வங்க முதல்வா் மம்தா

DIN

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் சா்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை பிஎஸ்எஃப் படையினா் சோதனை, பறிமுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை 50 கி.மீ. தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக பிஎஸ்எஃப் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘எனக்கு பிஎஸ்எஃப் படை மீது மதிப்புள்ளது. எனினும் அந்தப் படையினரின் அதிகாரத்தை விரிவுபடுத்தியது தேவையற்றது. அந்தப் படையினரால் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய முடியாது. அவா்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் பொதுமக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா். மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT