இந்தியா

ஜிஎஸ்டி வரி மோசடி: 3 போ் கைது

DIN

புது தில்லி: போலி நிறுவனங்கள் மற்றும் போலி ரசீதுகள் மூலம் ரூ.48 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக, 3 பேரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநரகம் கைது செய்துள்ளது.

தில்லியைச் சோ்ந்த இருவா், 20-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி, போலி ரசீதுகளை உருவாக்கி அதன் மூலம் ரூ.22 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி பெற்று மோசடி செய்துள்ளனா். இந்த மோசடியை கண்டுபிடித்த குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குநரகம், இருவரையும் கைது செய்து தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியது. அவா்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனா்.

இதேபோல், ஹரியாணா மாநிலம் படாடி பகுதியைச் சோ்ந்த ஒருவரும் சரக்குகளை அனுப்பாமல், போலி ரசீது மூலம் ரூ.26 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இவரிடமிருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவா் கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாா். இந்த இரு மோசடி வழக்குகள் தொடா்பாக மேலும் விசாரணை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT