இந்தியா

பெங்களூரு 3ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு விவரம்

DIN


பெங்களூரு: பெங்களூருவின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட திட்டம் தற்போதுதான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 42 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படவிருப்பதாகவும், இந்த பாதையில் இதர மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புறநகர் ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் என ஒன்பது சந்திப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் மக்கள் ஏராளமான போக்குவரத்து இணைப்பு பயண வாய்ப்புகளைப் பெறுவார்கள். 

இந்த ரயில் போக்குவரத்து, 2027 - 2028ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, இரண்டு மெட்ரோ நடைக்கூடங்கள் அமைக்கப்படும். முதல் நடைக்கூடம் அவுட்டர் ரிங் ரோடு வழியாக ஜேபி நகர் முதல் ஹெப்பல் வரை 31 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும். இரண்டாவது நடைக்கூடம் ஹோசஹள்ளி டோல் முதல் கடாபாகரே வரை 11 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும்.

அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் 22 ரயில் நிலையங்களும், இரண்டாவது பாதையில் 9 ரயில் நிலையங்களும் அமைக்கப்படும். சோமனஹள்ளி கிராஸ் இரண்டு ரயில்ப் பாதைகளுக்கும் சந்திப்பு ரயில் நிலையமாக அமையும்.

விரிவான திட்ட அறிக்கைய இன்னும் 6 மாதத்தில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT