இந்தியா

கண்ணூர் விமான நிலையத்தில் ரூ.67 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

DIN

கேரளத்தின் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 1.38 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று  (அக்-27) சார்ஜாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது 1.38கிலோ தங்கத்தை உருக்கி அணிந்திருந்த பெல்ட்டில் மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.67 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த அக்-19 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT