நவம்பர் 5-ல் கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு நவம்பர் 5-ஆம் தேதி செல்கிறார்.
இந்தியாநவம்பர் 5-ல் கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு நவம்பர் 5-ஆம் தேதி செல்கிறார்.
பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு நவம்பர் 5-ஆம் தேதி செல்கிறார்.
தொடர்ந்து கேதார்நாத் கோவிலில் அவர் வழிபாடு செய்கிறார். அதன் பிறகு, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைக்கவுள்ள பிரதமர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் திறந்து வைக்கிறார்.
இதையும் படிக்க- சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் மேற்கு வங்க ஆளுநர்
2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின்னர் சமாதி புனரமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி ஆஸ்தபத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நடந்து வரும் பணிகளை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார்.
பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். மேலும் 180 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.