கோப்புப்படம் 
இந்தியா

‘பாக். வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு’: உ.பி. முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும்

ANI

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் இடையே 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடா்ந்து பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

அதில், வெற்றியை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 7 பேர் மீதும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT