முகப்பு
இந்தியா

காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் தேடுதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை.

Updated On : 28 அக்டோபர், 2021 at 10:56 AM
கோப்புப்படம்
பகிர்:

காஷ்மீரில் தேடுதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை.

வடக்கு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதி பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததும் காவல்துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதியின் இருப்பை உறுதி செய்து சுற்றிவளைத்த காவல்துறையினரை சக்திவாய்ந்த ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்த தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 

Advertisement

பலியான தீவிரவாதியின் பெயர் , தொடர்புடைய இயக்கம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பயங்கரவாதியிடமிருந்து துப்பாகிகள் , கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.