முகப்பு
இந்தியா

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை: உ.பி. முதல்வர்

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
கோப்புப்படம்
பகிர்:

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

மேலும் மாநிலத்தில் தடுப்பூசி இயக்கத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் தற்போது 100 பேருக்கு உள்ளாகவே கரோனா சிகிச்சை பெற்று வந்தாலும் இந்த விஷயத்தில் எந்த அலட்சியமும் காட்ட வேண்டாம் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். 

மாநிலத்தில் 3 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 2 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். 

பிற மாநிலங்கள் மற்றும் ஒரு சில நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பு குழுக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.