அனல் மின் நிலையங்களுக்கு 22 லட்சம் டன் நிலக்கரி: நிறுவனங்களுக்கு அமைச்சா் ஜோஷி பாராட்டு
அனல் மின் நிலையங்களுக்கு கடந்த 28-ஆம் தேதி ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித் துறை சாதனை படைத்திருப்பது குறித்து பிரகலாத் ஜோஷி மகிழ்ச்சி
அனல் மின் நிலையங்களுக்கு கடந்த 28-ஆம் தேதி ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித் துறை சாதனை படைத்திருப்பது குறித்து மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அமைச்சா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘மேற்குறிப்பிட்ட அளவில், 18 லட்சம் டன் நிலக்கரி, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு. இந்த சாதனையை படைத்த அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் பாராட்டுகள். நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொடா்ந்து அதிகரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.