முகப்பு
இந்தியா

செபி தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ யின் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
புதுவையில் பி.ஆர்க். படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
பகிர்:

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ யின் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிக்கை:

செபியின் தலைவா் பதவிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான ஆவணங்களுடன் உரிய வழிமுறையில் 2021 டிசம்பா் 6-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் நபா் ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரையில் செபியின் தலைவராக பதவி வகிப்பாா் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல் பிரதேசத்திலிருந்து கடந்த 1984-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தோ்வான அஜய் தியாகி, செபியின் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டாா். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →