முகப்பு
இந்தியா

புனீத் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

கன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகன் நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது நாற்பத்து ஆறு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
புனீத் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்
பகிர்:


பெங்களூரு: கன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகன் நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது நாற்பத்து ஆறு.

கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமாருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள கண்டீருவா விளையாட்டு மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவரும் ரசிகர்களின் துயரம் போலவே வரிசையும் முடிவின்றி நீண்டுள்ளது.

கண்ணீருடன் அஞ்சலி செலுத்தக் காத்திருக்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திணறி வருகிறார்கள்.  திரையில் தோன்றி பல முறை தங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய புனீத் ராஜ்குமாரின் உடலை இறுதியாக ஒரு முறை பார்த்து அஞ்சலி செலுத்திவிட மாட்டோமா என்ற தவிப்புடன் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

புனீத்ராஜ்குமாரின் உடல்,  அவரது தாய் மற்றும் தந்தையின் நினைவிடங்களுக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.