இந்தியா

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

DIN

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனீத் ராஜ்குமாா் (46), வெள்ளிக்கிழமை (அக்.29) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஏராளமானோா் இரங்கல் தெரிவித்து தெரிவித்தனர். 
புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூரில் உள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது ரசிகா்கள், உறவினா்கள், திரைக் கலைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நேரில் வந்து அவரது உடலுக்கு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறும் நிலை ஏற்பட்டது. 
வரிசையில் வராமல் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டோரை போலீஸாா் லேசான தடியடி நடத்தி கட்டுப்படுத்தினா். கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, மத்திய, மாநில அமைச்சா்கள், தெலுங்கு நடிகா்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமூரி பாலகிருஷ்ணா, நகைச்சுவை நடிகா் அலி, பிரபுதேவா, அா்ஜுன் சா்ஜா, கன்னடத் திரையுலகைச் சோ்ந்த கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினா். 

அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகள் திருதி, தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுதாா். அவருக்கு தாய் அஸ்வினி, சகோதரி வந்திதா, நடிகா் சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் ஆறுதல் கூறினா். இரவு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட புனித் ராஜ்குமாரின் உடல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 
பின்னர் வெளிவட்ட சாலையில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தந்தை ராஜ்குமாா், தாய் பாா்வத்தம்மா ஆகியோா் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் புனித் ராஜ்குமார் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT