முகப்பு
இந்தியா

'பெண் சக்திக்கு சிறந்த உதாரணம்' - இந்திரா காந்திக்கு ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 
பகிர்:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 

'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாள் இன்று(அக்.31) அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யான ராகுல் காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

Advertisement

மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் பாட்டி கடைசி வரை பயமின்றி நாட்டுக்கு சேவை செய்தார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. பெண் சக்திக்கு சிறந்த உதாரணமான அவரின் நினைவுதினத்தில் அவருக்கு பணிவான அஞ்சலி' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments