'நாட்டின் மிகச்சிறந்த நாளாக மாறிய ஆக. 31' 
இந்தியா

'நாட்டின் மிகச்சிறந்த நாளாக மாறிய ஆக. 31'

நாட்டில் ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி; ஜிடிபி உயர்வு; சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத உச்சம்.

DIN

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாளான 31-ம் தேதி இந்தியாவின் மிகச்சிறந்த நாளாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், நாட்டில் நேற்று (ஆக. 31) ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், நடப்பு நிதியாண்டில் மார்ச் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்த நிலையில், சென்செக்ஸ் 57,552 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தையும் அடைந்துள்ளதாக அமைச்சர் மாண்டவியா பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT