முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 32,803 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக (செப்.1) அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கேரளத்தில் புதிதாக 32,803 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக (செப்.1) அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,803 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 173 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 32,803 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கடந்த 24 மணி நேரத்தில் 21,610 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,38,614-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 173 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 20,961-ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 2,29,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →