ராகுல் காந்தி 
இந்தியா

ஜிடிபி என்றால் மோடிக்கு கேஸ், டீசல் பெட்ரோல் தான்: ராகுல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜிடிபி என்றால் கேஸ், டீசல், பெட்ரோல் தான் என்றும் விமர்சித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, பாஜக ஆட்சியில் ஜிடிபி உயர்ந்து வருவதாக பிரதமர் மோடியும், அமைச்சர்களும் கூறி வருகின்றனர். 

அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஜிடிபி என்று குறிப்பிடுகிறார்கள் என்று கருதினேன். ஆனால் ஜிடிபி உயர்வு என்று பிரதமரும், நிதியமைச்சரும் கூறுவது கேஸ், டீசல், பெட்ரோலைத்தான் என பிறகுதான் தெரிந்தது என்று விமர்சித்தார்.  

மேலும் பேசிய அவர், 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் 42 சதவிகிதமும், டீசல் 55 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு மூலம் கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே என்றும் கேள்வி எழுப்பினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

பெளர்ணமி: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்!

மூக்குத்தி அம்மன் 2: முதல்பார்வை போஸ்டர்!

மேட்டூர் அணை நிலவரம்!

துபை டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்..! அதிகபட்ச தொகைதான் காரணமா?

SCROLL FOR NEXT