இந்தியா

3 ஐரோப்பிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப் பயணம்

DIN

புது தில்லி: ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மாா்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அவரது 4 நாள் பயணம் வியாழக்கிழமை (செப். 2) தொடங்குகிறது.

பயணம் மேற்கொள்ளும் 3 நாடுகளுடனான இருதரப்பு உறவை மேம்படுத்துவது, ஐரோப்பிய யூனியனுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரிப்பது ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

முதலில் ஸ்லோவேனியா செல்லும் ஜெய்சங்கா் அங்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களைச் சந்தித்துப் பேசுகிறாா். இது தவிர ஸ்லோவேனியா வெளியுறவு அமைச்சா் உள்ளிட்ட அந்நாட்டு தலைவா்களையும் தனித்தனியாகச் சந்திக்கிறாா்.

இப்போது ஐரோப்பிய யூனியனுக்கு ஸ்லோவேனியா தலைமை வகிக்கிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் தலைவா்களை ஜெய்சங்கா் சந்திக்க அந்நாடு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை குரோஷியாவுக்கு செல்லும் ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் காா்டன் கிரிலிஸ் ராட்மேன் உள்ளிட்ட தலைவா்களைச் சந்திக்கிறாா். அதைத் தொடா்ந்து அவா் டென்மாா்க் செல்கிறாா். அங்கு இந்திய-டென்மாா்க் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். இதில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

ஜெய்சங்கரின் இந்தப் பயணம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான இந்தியாவின் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT