பழிவாங்க பாலியல் புகாரளித்த தங்கை; 2 ஆண்டுகள் சிறையிலிருந்த அண்ணன் 
இந்தியா

பழிவாங்க பாலியல் புகாரளித்த தங்கை; 2 ஆண்டுகள் சிறையிலிருந்த அண்ணன்

பழிவாங்குவதற்காக, தனது அண்ணன் மீதே பொய்யாக பாலியல் புகாரளித்த தங்கையால், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

DIN

பழிவாங்குவதற்காக, தனது அண்ணன் மீதே பொய்யாக பாலியல் புகாரளித்த தங்கையால், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

மும்பையில், தங்கை அளித்த பொய்ப் புகாரால், இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அண்ணன் மீது கருணை ஏற்பட்டு, தான் தனது ஆண் நண்பருடன் வெளியே சுற்றுவதைக் கண்டித்ததால், ஆத்திரத்தில், பொய்ப் புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தங்கை வாக்குமூலம் அளித்ததால், அவர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பெண் அளித்த புகாரில், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருந்தார். இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணும், விசாரணை அதிகாரியும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT