இந்தியா

ராஜீவ் காந்தி பெயரில் அறிவியல் நகரம்: மகாராஷ்டிர அரசு

ANI

புணேவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

புணேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும்.

மேலும், இந்த நகரமானது ரூ. 191 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரிலிருந்து ராஜீவ் காந்தி பெயரை மத்திய அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT