இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி:  வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரவீண் குமார்!

DIN

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீண் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆடவா் உயரம் தாண்டுதல்-டி64 இறுதிச்சுற்று போட்டியில், பிரிட்டன் வீரர் ஜானதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை எதிர்கொண்ட 18 வயதான இந்திய வீரர் பிரவீண் குமார், தனது முதல் பாராலிம்பிக்கில் போட்டியில் 2.07 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்தார்.

இந்திய தடகள வீரர் பிரவீண் தனது முதல் முயற்சியிலேயே 1.88 மீட்டரும், அடுத்தடுத்த முயற்சிகளில் 1.93 மீட்டர், 2.01 மீட்டர் தாண்டி மூன்றாவது இடத்தை பிடித்தார். அடுத்தடுத்த முயற்சிகளில் 2.01 மீட்டர், 2.04 மீட்டர் தாண்டி, விடாமுயற்சியில் சவாரி செய்து 2.07 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையை படைத்தார்.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல்ம் என 11 பதங்களை வென்று பதக்கப்பட்டியலில் 36 ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT