முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் 67.72 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

 நாடு முழுவதும் இதுவரை 67.72 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

 நாடு முழுவதும் இதுவரை 67.72 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,618 போ் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681-ஆக உள்ளது.

குணமடைந்தவா்களின் விகிதம் 97.43 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 36,385 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை மொத்தம் 3,21,00,001 போ் குணமடைந்துள்ளனா்.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 52.82 கோடியாகும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →