கோப்புப்படம் 
இந்தியா

கோவாவில் இதற்கு மட்டும்தான் எனக்கு அதிகாரம் உள்ளது: ப. சிதம்பரம்

​கோவாவில் காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்து, மீட்டெடுக்கும் பணிதான் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN


கோவாவில் காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்து, மீட்டெடுக்கும் பணிதான் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சனிக்கிழமை தெரிவித்தார்.

கோவாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ப. சிதம்பரம் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மூன்று நாள் பயணமாக அவர் வெள்ளிக்கிழமை கோவா வந்தார். அங்கு தேர்தல் குழுத் தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோருடன் பல்வேறு கூட்டங்களை அவர் நடத்தினார்.

இதன்பிறகு, அடுத்தாண்டு வரவுள்ள பேரவைத் தேர்தலில் ஒரே சிந்தனையுடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்து அவர் கூறியது:

"கட்சியை மறுகட்டமைப்பு செய்து மீட்டெடுப்பது, கமிட்டிக்களை மறுசீரமைப்பு செய்வது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது."

முன்னதாக கடந்த வாரம் கோவா வந்தபோது, கோவா பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தயாராகி வருவதாகக் கூறினார். மேலும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT