கோப்புப்படம் 
இந்தியா

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி: மத்திய சட்டத்துறை அமைச்சர்

"என்ன செய்ய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரியாக செய்துவருகிறார்" என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணாவை கெளரவிக்கும் வகையில் இந்திய வழக்கறிஞர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார். அப்போது, இந்திய நீதித்துறை சாமானிய மனிதனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ரிஜிஜு, நாட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து பேசும்போது, "நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவகாரத்தை மக்கள் நீதிமன்றத்தில் எழுப்பிவருகின்றனர்.

நாம் அவசரமாக பார்க்க வேண்டியது கீழமை நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள். பின் தங்கிய கிராமப்புற பகுதிகளிலிருந்து வரும் மக்கள், நீதிக்காக அனைத்தையும் தர வேண்டியுள்ளது. சில நேரங்களில், நிலங்கள், சொத்துகளைக் கூட விற்கின்றனர்.

நீதி தாமதிக்கப்பட்டால், அது நமது செயல்பாடுகள் குறித்து எழுப்பப்படும் கேள்வியே ஆகும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. தொலைதூரத்தில் உள்ள சாமானியனுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகிறது" என்றார். 

பின்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குறித்து பேசிய அவர், "என்ன செய்ய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரியாக செய்துவருகிறார். ரமணா நீதித்துறைக்கு புதிய விடிலை தருவார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT