இந்தியா

12 உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் பரிந்துரை

DIN

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட கொலிஜியம், ஒரே நேரத்தில் 12 உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அலகாபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், மதராஸ், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஹரியாணா, கேரளா, சத்தீஸ்கர், அசாம் ஆகிய நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 25 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், கொலிஜியம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 82 வழக்கறிஞர்கள், 31 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் என 112 பேர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதில், 44 வழக்கறிஞர்கள், 24 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியான மார்லி வான்குங்கை குவஹாத்தி உயர் நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இம்முறை, மொத்தமாக 10 பெண்கள் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி, தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு ஏழு நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, அதே நாள் உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை செய்யப்பட்டனர். பரிந்துரைக்கப்பட்ட 9 நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, வரலாற்றில் முதல்முறையாக ஒன்பது நீதிபதிகளும் ஒரே நேரத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT